NGK Kapan Release date

NGK & Kappan Release Date : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள NGK மற்றும் காப்பான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

கதைக்கு ஏற்றார் போல தேதி குறித்த ஷங்கர் – இந்தியன் 2 ரிலீஸ் தேதி இதுவா?

தீபாவளிக்கே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த NGK தொடர்ந்து தள்ளி போய் கொண்டே வந்த நிலையில் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

இதன் டீஸர் வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக வெளிவர உள்ளது. இதனையடுத்து காப்பான் திரைப்படமும் முடிவுறும் நிலையில் உள்ளது.

எனவே இந்த படமும் வரும் மே மாத கடைசியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஓரிரு மாத இடைவெளியிலேயே சூர்யா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here