Top Stars
பிரபல டிவி சேனலை சூர்யா ரசிகர்கள் திட்டி தீர்க்க அவர்களுக்கு ஆதரவாக விஜய், அஜித் ரசிகர்களும் கை கோர்த்துள்ளனர்.

2019 வருடம் முடிவடைந்து இன்னும் 4 நாளில் புது வருடம் பிறக்க உள்ளது. இதனால் பல டிவி சேனல்கள் 2019-ற்கான விருது விழாக்களை நடத்தி வருகின்றன.

அப்படி தான் ஜீ தமிழ் சேனலும் இந்த வருடத்திற்கான விருது விழாவை அறிவித்துள்ளது. ஆனால் இதில் ஒரே ஒரு கேட்டகரியில் கூட நாமினேஷன் பட்டியலில் சூர்யாவின் பெயர் இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் அந்த சேனலை விளாசி எடுக்க ஐ ஸ்டேண்ட் வித் சூர்யா என்ற ஹேஸ்டேக் மூலமாக அஜித், விஜய் ரசிகர்களுக்கு சூர்யா ரசிகர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

நாமினேஷன் பட்டியலில் கூட இடம் பெறாத அளவிற்கு சூர்யா ஒன்று மோசமான நடிகர் இல்லை, ஒருவரை இப்படியெல்லாம் தரக்குறைவாக எடை போட வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.