கொரானா நிவாரண நிதியாக சூர்யா குடும்பத்தினர் ரூபாய் ஒரு கோடி அளித்துள்ளனர்.

Suriya Family Donated to CM Fund : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. கொரானாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரானா நிவாரண நிதியாக 1 கோடி அளித்த சூர்யா குடும்பம் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

தமிழக முதல்வர் எம் கே ஸ்டாலின் அவர்கள் மக்களிடம் கொரோனா நிவாரண நிதி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மக்கள் அளிக்கும் நிதி எவ்வளவு என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும்படி வெளிப்படையாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார் குடும்பத்தினர் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடி அளித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் பலரும் சூர்யாவின் குடும்பத்தினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.