சூர்யா எடுத்த திடீர் முடிவால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

Suriya Decision on Pandiraj Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. சூரரைப் போற்று என்ற ஹிட் படத்தை கொடுத்த இவர் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யா 40 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். சூர்யா 40 படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. தற்போது கொரானா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சூர்யா எடுத்த திடீர் முடிவு.. உச்சகட்ட குழப்பத்தில் சன் பிக்சர்ஸ்.!!

நடிகர் சூர்யா ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது தான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். அதன்பின்னர்தான் அவர் சூர்யா 40 படப்பிடிப்பில் கூட கலந்து கொண்டார். தற்போது நிலவில் சூழ்நிலை மிகவும் அச்சத்திற்குரியதாக இருப்பதால் நடிகர் சூர்யா ஓரிரு மாதங்களுக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.

இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் சூர்யா 40 படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.