பெரியம்மாவை விட உயரமாக வளர்ந்து நிற்கிறார் ஜோதிகாவின் மகள் தியா.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா‌. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி நடித்த மொழி படங்களில் நடித்து வந்த இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். இரண்டு குழந்தைகளைப் பெற்று அவர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்திய ஜோதிகா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சூர்யாவின் மகள் தியா வேகவேகமாக வளர்ந்து நாயகியாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். இந்த நிலையில் ஜோதிகா, தியா உள்ளிட்டோர் நக்மாவுடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

தியா தன்னுடைய பெரியம்மா நக்மாவை விட உயரமாக வளர்ந்து நிற்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் தியாவின் வளர்ச்சி பற்றி ஆச்சரியமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.