தயாரிப்பாளராக பாலாவுக்கு சூர்யா செக் ஒன்றை வைத்துள்ளார்.

Suriya Condition to Bala : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது பல வருடங்களுக்குப் பிறகு பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

தயாரிப்பாளராக பாலாவுக்கு சூர்யா வைத்த செக்..  இத்தனை வருஷ அனுபவத்துல இதுதான் முதல் முறை - வெளியான ஷாக் தகவல்

பாலாவின் இயக்கத்தில் நடித்ததன் மூலமாகத்தான் சூர்யாவின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக மாறியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பாலா இயக்கும் படத்திற்கு தற்போது சூர்யா செக் ஒன்றை வைத்துள்ளார். அதாவது இந்த படத்தை மூன்றே மாதத்தில் இயக்கி முடித்து விட வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுள்ளனர். கைவசம் படங்கள் இல்லாமல் இருக்கும் பாலாவும் வேறு வழியில்லாமல் இதற்கு ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தான் என்னுடைய inspiration – Actor Ashwin Full Speech | #EnnaSollaPogiraiAudioLaunch

பொதுவாக பாலா இயக்கும் படங்களுக்கு தான் நினைக்கும் போதுதான் சூட்டிங்கிற்கு வருவார். அவர் எதிர்பார்க்கும் நடிப்பு கிடைக்கும் வரை அந்த காட்சிகளை திரும்பத் திரும்ப ஷூட் செய்வார். ஒரு காட்சி மட்டுமே ஒரு நாள் முழுவதும் ஷூட் செய்த சம்பவங்கள் எல்லாம் உள்ளது. இதனால்தான் சூர்யா அவருக்கு இப்படி ஒரு செக் வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

உலக டூர் பேட்மிண்டன் இறுதிச்சுற்று போட்டி : ஆன்சியங் மிரட்டல், பி.வி.சிந்து மிரட்சி..

தயாரிப்பாளராக பாலாவுக்கு சூர்யா வைத்த செக்..  இத்தனை வருஷ அனுபவத்துல இதுதான் முதல் முறை - வெளியான ஷாக் தகவல்

இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன், சிறுத்தை சிவா உள்ளிட்ட இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் இப்படி ஒரு ஒப்பந்தத்தை போட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.