Suriya Completed His Portions in Navarasa

கௌதம் மேனன் படத்தில் தன்னுடைய காட்சிகளில் நடிக்க நடித்துக் கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா.

Suriya Completed His Portions in Navarasa : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் பாண்டிராஜ் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதை ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

இப்படங்கள் தொடங்குவதற்கு முன்பாகவே நடிகர் சூர்யா கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நவரசா என்ற வெப்சீரிஸ் நடிக்கவும் ஒப்பந்தம் ஆனார்.

சூரரைப்போற்று படத்திற்கு அடுத்ததாக வெறும் ஒரே வாரத்தில் நவரசா வெப் சீரிஸ்க்கான தன்னுடைய மொத்த காட்சிகளையும் நடித்து முடித்துக் கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா.

இது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.