நடிகர் சூர்யா, பிரபாஸ் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் “சூர்யா 42″என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

500 கோடி பட்ஜெட் படத்தில் சூர்யா.. அதுவும் யாருடன் நடிக்க போகிறார் தெரியுமா? வெளியான மாஸ் தகவல்!!.

இந்நிலையில் நடிகர் சூர்யா சூரரைப் போற்று, ஜெய் பீம், விக்ரம் போன்ற பல மாஸ் படங்களில் நடித்து அசத்தியுள்ளதால் திரையுலகமே இவரை பாராட்டி வரும் நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் “Project K” திரைப்படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

500 கோடி பட்ஜெட் படத்தில் சூர்யா.. அதுவும் யாருடன் நடிக்க போகிறார் தெரியுமா? வெளியான மாஸ் தகவல்!!.

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே ஆகியோரும் ஒவ்வொரு மொழியில் நடிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.