பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் சூர்யா வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.

Suriya Clarification About Bala Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா.. பாலா இயக்கும் படத்தில் இருந்து வெளியான புதிய லுக் - வைரலாகும் போட்டோ

இப்படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சூர்யா படப்பிடிப்பில் இருந்து வெளியேறியதாகவும் இந்த படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் இதனை படக்குழு மறுத்திருந்த நிலையில் இது குறித்த தகவலை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருந்தன. இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா இந்த படத்தின் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் சூட்டிங்கில் பங்கேற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா.. பாலா இயக்கும் படத்தில் இருந்து வெளியான புதிய லுக் - வைரலாகும் போட்டோ

இதன் மூலம் சூர்யா, பாலா கூட்டணியில் உருவாகும் படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்