Suriya Birthday Common DP Record
Suriya Birthday Common DP Record

அஜித், விஜய் ஆகியோரின் காமன் டிபி சாதனையை முறியடித்து சூர்யாவின் பிறந்தநாள் காமன் டிபி புதிய சாதனையை படைத்துள்ளது.

Suriya Birthday Common DP Record : தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் பிறந்த நாள் என்றால் காமெடி புகைப்படத்தை வெளியிட்டு கொண்டாடுவது என்பது வாடிக்கையான ஒன்றாகி வருகிறது.

அந்த வகையில் நடிகர் சூர்யா வரும் ஜூலை 23 ஆம் தேதி தன்னுடைய 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதற்கான காமன் டிபி புகைப்படம் ஜூலை 11-ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியானது.

கோலிவுட் டூ பாலிவுட் வரை மொத்தம் 100 பிரபலங்கள் இணைந்து சூர்யாவின் காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டனர்.

ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா ட்வீட்.. சூர்யாவின் அடுத்த படம் பற்றி வெளியான மாஸ் அப்டேட்!

இதுவே மிகப் பெரிய சாதனையாக இருந்து வந்த நிலையில் தற்போது அஜித், விஜய் ஆகியோரின் பிறந்த நாள் காமன் டிபி சாதனைகளை முறியடித்து சூர்யாவின் காமன் டிபி புதிய சாதனை படைத்துள்ளது.

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.