Suriya and Siva :
Suriya and Siva :

Suriya and Siva : பிரபலங்களின் வாரிசுகளாக அறிமுகமாகும் எல்லோருக்கும் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரிப்பதில்லை.

லட்சிய கனவுகளோடு காலடி எடுத்து வைக்கும் எல்லோரையும் கலைத்தாய் கட்டியணைத்து அரவனைப்பதில்லை.

தோல்விகள், அவமானங்கள் என துயரங்கள் துரத்தியபோதும் விடா முயற்சியுடன் போராடுபவர்களே இறுதியில் வெற்றிக்கொடியை நாட்டுகிறார்கள்.

இதற்கு முன்னுதாரணமாய் இருக்கும் சம கால நடிகர்களில் ஒருவர் சூர்யா.

இவர் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. இதில் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள என்.ஜி.கே படம்,

மே இறுதியிலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காப்பான் படம் ஆகஸ்ட் இறுதியிலும் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்துவரும் சூரரைப் போற்று படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

suriya and siva
suriya and siva

இதுபோக அடுத்ததாக சிவா இயக்கத்திலும் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளாராம்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூடிய விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா – சிவா கூட்டணி இணைவது சில மாதங்களாக செய்திவரும் தற்போதே இந்த செய்தியானது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here