Suriya and Karthi in Remake Movie
Suriya and Karthi in Remake Movie

ஒரே படத்தில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Suriya and Karthi in Remake Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவருக்குமே தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள சுல்தான் திரைப்படத்திற்காகவும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்திற்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜய், சூர்யாவை தொடர்ந்து இவருக்கும் ஜோடியாகிறார் மாளவிகா மோகனன்? – ஒரு ரவுண்டு வந்துட்டாங்களே.!

மேலும் சூர்யாவும் கார்த்தியும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது.

நடிகர் கார்த்தி கூட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது நல்ல கதை அமைந்தால் நானும் அண்ணாவும் சேர்ந்து நடிக்க தயாராக உள்ளோம் என கூறியிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. மலையாளத் திரையுலகில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கோசியும் ஐயப்பனும்.

தற்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இப்படத்தில் யார் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சூர்யா கார்த்தி இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவத் தொடங்கியுள்ளது.

விஷாலுக்கு வில்லியாக நடித்த திமிரு பட நடிகை ஸ்ரேயா ரெட்டியா இது?? கருப்பு பேரழகியாக குட்டையான உடையில் கொடுத்த போஸ் – இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!

அப்படி இவர்கள் இந்த படத்தில் இணைந்து நடித்தால் கார்த்தி பிரித்திவிராஜ் நடித்த கோஷி கதாபாத்திரத்திலும் சூர்யா ஐயப்பன் கதாபாத்திரத்திலும் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். ஒருவேளை இவர்கள் இணைந்து நடிப்பது உறுதியானால் நிச்சயம் அது சூர்யா கார்த்தி ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.