சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் செய்த செயல் ரசிகர்களை பாராட்ட வைத்துள்ளது.

Suriya and Karthi Help to Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி. உடன்பிறந்த சகோதரர்கள் ஆனால் இவர்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தன்னுடைய ரசிகர்கள் மிது இருவருமே அதிக அக்கறை கொண்டவர்கள் என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒன்று.

இதுலயும் இவ்வளவு ஒற்றுமையா? சூர்யா, கார்த்தி செய்த செயல் - குவியும் பாராட்டுக்கள்

இந்த கொரொனா ஊரடங்கு காரணமாக பலரும் வேலையின்றி வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர். இதனால் பலரும் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளனர். இதன் காரணமாக நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர் மன்றத்தை உள்ள 250 க்கும் மேலான ரசிகர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் வங்கி கணக்கு மூலமாக அனுப்பியுள்ளார்.

அவரைப்போலவே நடிகர் கார்த்தியின் கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு பணம் அனுப்பியுள்ளார். சூர்யா மற்றும் கார்த்தியின் இந்த செயல் ரசிகர்கள் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.