நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் ஜோடியாக இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suriya and Jyothika in Upcoming Movie : தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக இருந்து திருமணம் செய்து கொண்டவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இருவரும் இணைந்து உயிரிலே கலந்தது, மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர்.

திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜோதிகா தற்போது மீண்டும் அடுத்த இன்னிங்சை தொடங்கி பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் இதுவரை அவரை மையப்படுத்திய கதைகளில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது சூர்யாவுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்க உள்ள தனது அடுத்த படத்தில் அவருடன் இணைந்து ஜோதிகாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே பாலா, சூர்யா கூட்டணி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜோதிகாவும் நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.