Suriya and Hari Combo

Suriya And Hari Combo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா மீண்டும் இயக்குனர் ஹரியுடன் இணைய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நடிகர் சூர்யாவிற்கு தொடர்ந்து ஹிட்டான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஹரி. இவர்களது கூட்டணியில் உருவாகி இருந்த வேல், சிங்கம் சீரிஸ் படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன.

தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இவர்கள் இணைய உள்ள இந்த படம் கடந்த 2007-ம் ஆண்டில் வெளியான வேல் படத்தின் இரண்டாம் பாகம் எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் நாயகியாக நடிக்க வைக்க அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் பலரும் சூர்யா, ஹரி கூட்டணிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேல் படத்தில் நாயகியாக அசின் நடித்திருந்தார். தற்போது அவர் படங்களில் நடிப்பதில்லை என்பதால் அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Surya And Anushka

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here