Suriya and Bala Movie Update

பாலாவுடன் நடிகர் சூர்யா மீண்டும் நடிக்க உள்ள நிலையில் அந்த படம் பற்றி சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Suriya and Bala Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.

இன்று சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.

என் திறமை மீது, டிராவிட்டுக்கு நம்பிக்கை உண்டு : ‘ஆட்டநாயகன்’ தீபக் சாஹர்

அதுமட்டுமல்லாமல் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் தொடர்ந்து பல வெற்றி இயக்குனர்களுடன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படியான நிலையில் மீண்டும் பாலாவுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியானது.

என்னுடைய மகன் உயிர் பிழைக்க விஜய் தான் காரணம் – பிரபல நடிகர் உருக்கம் | Viral Video | LatestNews |HD

மூன்றாவது முறையாக பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ள சூர்யா அந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இது சூர்யா ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.