Suriya about Seethakaathi

Suriya About Seethakaathi : விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் ட்ரைலரை பார்த்து முன்னணி நடிகரான சூர்யா புகழ்ந்து தள்ளி ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மக்கள் செல்வனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மேலும் தன்னுடைய 25-வது படமாக நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் என்ற படத்தை இயக்கிய பாலாஜி தரணி தரண் இயக்கத்தில் சீதக்காதி படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா இந்த ட்ரைலர் பற்றி ட்வீட் செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் சீதக்காதி ட்ரைலர் சூப்பராக இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் படத்தை பார்க்க ஆவலாக காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.