Suriya About Khakka Khakka Movie

காக்க காக்க திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா இல்லை என பேட்டி ஒன்றில் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.

Suriya About Khakka Khakka Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பிலும் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காக்க காக்க.

இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். இந்தத் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படமாக அமைந்தது.

ஆனால் தற்போது கௌதம் மேனன் பேட்டி ஒன்றில் முதலில் இந்தப் படத்தின் கதையை விக்ரம், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு கூறியுள்ளார்.

ஆனால் இறுதியில் இந்த வாய்ப்பு சூர்யாவிற்கே கிடைத்துள்ளது. இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .