சூர்யா 42 திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் சிறுத்தை சிவா பகிர்ந்திருக்கும் அப்டேட்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் உள்ளிட்ட அப்டேட்களுக்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா பகிர்ந்திருக்கும் அப்டேட்ஸ் வைரலாகி வருகிறது.

அதில் அவர், வரும் ஏப்ரல் மாதத்தில் சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் டேட் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் மே மாதத்தில் டீசர் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் படத்தின் புரோமோ எக்ஸ்ட்ராடினறியாக உருவாகி இருப்பதாகவும் கூறி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்திருக்கிறார்.