இணையத்தில் வைரலாகும் சூர்யா 42 அப்டேட்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோகிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக பத்து மொழிகளில் உருவாக்கி வரும் 3டி படமான சூர்யா 42-ல் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு ஏற்கனவே வரும் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 9:05 மணி அளவில் வெளியாகும் என அதிகாரபூர்வமான அறிவித்திருந்ததே தொடர்ந்து இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது. அதனை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.