சூர்யா நடிக்க இருக்கும் சூர்யா 42 திரைப்படத்தின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்திய திரை உலகில் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சூர்யா. இவர் தற்பொழுது வணங்கான், வாடிவாசல் போன்ற படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க இருக்கும் “சூர்யா 42” என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

வெளியானது சூர்யா 42வின் கதாபாத்திரம் குறித்த அப்டேட்!!.. மிகுந்த உற்சாகத்தில் ரசிகர்கள்.

தற்பொழுது சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்க உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்க, ஆனந்த்ராஜ், கோவை சரளா, கிங்ஸ்லி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

வெளியானது சூர்யா 42வின் கதாபாத்திரம் குறித்த அப்டேட்!!.. மிகுந்த உற்சாகத்தில் ரசிகர்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. தற்பொழுது படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் சூர்யா 42 திரைப்படம் 10 மொழிகளில் 3d இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து நேற்று இப்படத்திற்கான மிரட்டலான மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது. அப்போஸ்டர் இணையத்தில் பயங்கரமாக வைரல் ஆகி வந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய தகவலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

வெளியானது சூர்யா 42வின் கதாபாத்திரம் குறித்த அப்டேட்!!.. மிகுந்த உற்சாகத்தில் ரசிகர்கள்.

அதாவது இப்படத்தில் சூர்யா முக்காட்டார், மண்டாங்கர், வெண்காட்டர் மற்றும் அத்தர் போன்ற பல வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு நடிகர் சூர்யாவுக்கு ஸ்பெஷல் மேக்கப் டெஸ்ட் மற்றும் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அதற்குப் பிறகுதான் அவருக்கான கதாபாத்திரங்களை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூப்பரான தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.