சூர்யா 42 படம் பற்றி சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை எண்ணூர் துறைமுகம் மற்றும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பாக பெரிய சண்டை காட்சி விமானத்தின் உள்ளே உருவாக இருக்கிறது. இதற்காக ஈவிபி ஃபிலிம் சிட்டியில் விமானத்தின் உட்புற செட் வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலால் இப்படத்தில் இடம்பெற இருக்கும் சண்டை காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தகவல் ரசிகர்களின் ஆர்வத்தையும் அதிகரிக்க செய்து இணையத்தில் வைரலாகவும் பரவி வருகிறது.