சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட்ல உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார். மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை எண்ணூர் துறைமுகம் மற்றும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு உருவாகி வருகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் ஆர்வத்துடன் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்த அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து அதிகாரபூர்வமான தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.