பத்து மொழிகளில் படு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது சூர்யா 42 படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடித்து வரும் இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 42 படத்திலும் நடித்து வருகிறார்.

பத்து மொழிகளில் படு பிரம்மாண்டமாக 3D-ல் உருவாகும் சூர்யா 42 - படு மிரட்டலாக வெளியான மோஷன் போஸ்டர்

யுவி கிரியேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஞானவேல் ராஜா வழங்கும் இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

பத்து மொழிகளில் படு பிரம்மாண்டமாக 3D-ல் உருவாகும் சூர்யா 42 - படு மிரட்டலாக வெளியான மோஷன் போஸ்டர்

மொத்தம் பத்து மொழிகளில் இந்த படம் 3டி-ல் உருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரட்டலான லுக்கில் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படத்திலும் ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya 42 - Motion Poster | Suriya | Siva | Devi Sri Prasad | Studio Green | UV Creations