சூர்யாவின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம், ஹரி இயக்கத்தில் ஒரு படம் இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார்.
இந்த படங்களை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்து உறுதி செய்துள்ளார் கலைப்புலி எஸ் தாணு.
இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர்
வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் #Suriya40 @theVcreations தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.
– S.Thanu@Suriya_offl @VetriMaaran— Kalaippuli S Thanu (@theVcreations) December 21, 2019