Suriya 40
சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.வி ப்ரகாஷிற்கு இது 75-வது படம் என்பதால் GV75 என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. அதே போல் Suriya40 என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.