Suriya 40 Director : Suriya Joins with Sun Pictures | kollywood Cinema | Tamil Cinema News | Latest Tamil CInema News | Today Top Tamil Cinema News
சூர்யா மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இப்படத்தின் இயக்குனர் யாராக இருக்கும் என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

Suriya 40 Director : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் NGK திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து கே.வி ஆனந்த் இயக்கி உள்ள காப்பான் திரைப்படமும் வெகு விரைவில் ரிலீசாக உள்ளது.

சூர்யா 39 படத்திலும் விஸ்வாசம் ஸ்பெஷல் – பக்கா பிளானோடு இறங்கும் சிவா.!

மேலும் இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து சூர்யா சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க பச்சை கொடி காத்திருப்பதாக கூறப்டுகிறது.

ஆனால் இது சிங்கம் 4 படம் இல்லை எனவும், இந்த படத்தை பேட்ட படத்தின் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் அல்லது கடைக்குட்டி சிங்கம் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

சூர்யா 39 படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.