Suriya 39
சூர்யா, ஹரி இணைந்துள்ள சூர்யா 39 படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணிகளில் ஒன்றாக இருந்து வருவது ஹரி – சூர்யா கூட்டணி. தற்போது இவர்களின் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகியுள்ள நிலையில் இசையமைப்பாளர் என்ற தகவலும் கசிந்துள்ளது.

டி.இம்மான் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒருவேளை இது உறுதி செய்யப்பட்டால் சூர்யா ஹரி கூட்டணியில் இம்மான் இணைவது இதுவே முதல் முறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.