
Suriya 39 : நடிகர் சூர்யா தன்னுடைய 39 -வது படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைய இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK, K.Vஆனந்த் இயக்கத்தில் சூர்யா 37 என்ற பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படங்களை தொடர்ந்து தன்னுடைய 38-வது படத்திற்காக இறுதி சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த தகவல்களை தொடர்ந்து தற்போது சூர்யா 39 படத்திற்கான அடுத்த படம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
ஆம், அது என்னவென்றால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் மீண்டும் ஓர் படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதுமட்டுமில்லாமல் இந்த படம் நிச்சயம் வேல் படத்தின் இரண்டாம் பாகமாக தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஹரி இயக்கத்தில் சூர்யா இயக்கத்தில் நடித்திருந்த வேல் படம் கடந்த 2007-ல் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகையாக வலம் வந்த அசின் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.