Suriya 39
ஹீரோ சூர்யா படம் என்னதான்பா ஆச்சு என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களே இதோ வந்துடுச்சு அப்டேட்.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான சூர்யா ஹரி இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அறிவிப்பு வந்ததோடு இந்த படத்தை பற்றி வேறு எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. சமீபத்தில் தான் இப்படத்திற்கு இம்மான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியானது.

அந்த தகவல் தற்போது இன்னும் உறுதியாகியுள்ளது. மேலும் முக்கிய அப்டேட் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜனவரி முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் சூர்யா ரசிகர்கள் வெகு விரைவில் எதிர்பார்க்கலாம். சூர்யா ஹரி கூட்டணி என்றாலே ஹரிஷ் ஜெயராஜ் அல்லது தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைப்பார். ஆனால் தற்போது இம்மானுடன் கூட்டணி அமைத்திருப்பது தான் ஒர்க் அவுட் ஆகுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here