Suriya 39 Movie Heroine : Fans Shocked - Latest Update | Suriya | Siruthai Siva | Kollywood Cinema News | Tamil Cinema News
இரண்டாவது முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக உள்ளாராம் காஜல் அகர்வால்.

Suriya 39 Movie Heroine : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப்போற்று திரைப்படம் உருவாகி வருகிறது. அதே சமயம் சூர்யாவின் காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த இரண்டு படங்களுக்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 39 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஒரே கண்டிஷனால், போயா நீயும் உன் காதலும் என கழட்டி விட்ட காஜல் – அப்படி என்ன கண்டிஷன்?

காஜல் அகர்வால் ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக விவேகம் படத்தில் நடித்திருந்தார், ஆனால் அந்த படம் பெரிய அளவில் அஜித்திற்கு ஒரு சறுக்கத்தை தான் கொடுத்தது.

இது ஒரு புறம் இருக்க இவர் சூர்யாவிற்கு ஜோடியாக மாற்றான் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் ஹிட்டாகவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் என்னது மீண்டும் காஜலா? என கொஞ்சம் ஷாக்காகி உள்ளனர்.

எது எப்படியோ படம் ஹிட்டாகி விட்டால் போதும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.