Suriya 39 Heroine : Ajith Vijay Heroine Again Join WIth Suriya? | Thala Ajth | Thalapathy Vijay | Kollywood Cinema News | Trending Cinema News
சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Suriya 39 Heroine : கண்ணழகி என்று தமிழ் ரசிகர்களால் பாராட்டப்படும் காஜல் அகர்வால், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

தற்போது தமிழ் மொழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இணைந்து நடித்த “கோமாளி” படம் சக்க போடு போட்டு கொண்டு உள்ளது.

“கோமாளி” படத்தின் இந்த வரவேற்பை தொடர்ந்து காஜல் அகர்வால் அடுத்த தமிழ் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் மாதவனின் புது முயற்சியில் இணையும் பிரபலம்.!

மேலும், இந்த படத்திற்கு முன்னதாகவே பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கும், உலக நாயகன் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார் என்பது தெரிந்த ஒன்று.

தற்போது, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரிய நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்காகவே காஜல் அகர்வால் ஒப்பந்தமாக உள்ளதாக செய்திகள் வந்து உள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஜல் மற்றும் சூரியா இணைந்து இதற்கு முன்னதாக “மாற்றான்” படத்தில் இணைந்து நடித்த படம் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.