Suriya 38
Suriya 38

Suriya 38 : சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூர்யா 38.

இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

ஹோட்டலில் மகனுடன் கூலாக உணவருந்தும் விஜய் – வைரலாகும் புதிய புகைப்படம்!

இதன் படப்பிடிப்பு அண்மையில்தான் துவங்கியது. அதற்குள் இப்படம் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அதாவது இப்படத்தின் படப்பிடிப்பிற்காக பயன்படுத்த படப்பிடிப்பு கருவிகள் வேறு மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாம்.

பொதுவாக தமிழகத்தில் நடக்கும் படப்பிடிப்புக்கு தமிழகத்தில் இருந்துதான் கருவிகள் பயன்படுத்தப்படும்.

Suriya 38
Suriya 38

ஆனால் இப்படத்துக்கு வேறு மாநிலத்தில் இருந்து கருவிகள் வரவழைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்துக்கு சூர்யாவே தயாரிப்பாளர் என்பதால் கூடிய விரைவில் இவ்விவகாரம் அவர் காதிற்கு செல்லும் என்றும் சொல்லப்படுகிறது.

இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நாயகியாக நடித்தவர்.

மேலும்  ஜி.வி.பிரகாஷ்  இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.