Suriya 38 Update
Suriya 38 Update

Suriya 38 Update – மீண்டும் வாரணம் ஆயிரம் ஸ்டைலில் சூர்யாவின் அடுத்தப் படம் உருவாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK மற்றும் கே.வி. ஆனந்த இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தில் சூர்யா ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளாராம்.

இப்படம் இந்திய ராணுவ அதிகாரியான ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா ஏற்கனவே வாரணம் ஆயிரம் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.