Suriya 38 Official

Suriya 38 Official : சூர்யா 38 படத்தை பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் NGK, கே. வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் ஆகிய படங்களை தொடர்ந்து இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்திருந்தன.

மேலும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. அதே சமயம் ஜி.வி-யும் அதனை அதிகாரபூர்வமாக உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது 2D எண்டெர்டைன்மெண்ட் நிறுவனமும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் சுதா கொங்காரா தான் எனவும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தான் எனவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.