Suriya

சூர்யா 38 திரைப்படம் பட்டய கிளப்பும் கூட்டணியுடன் உருவாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

உறுதியானது NGK ரிலீஸ் தேதி – சூர்யா ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.!

இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் NGK திரைப்படம் மே 31-ல் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை அடுத்து சூர்யா 37 படமான காப்பான் திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனை இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கியுள்ளார்.

அதன் பின்னர் இறுதி சுற்று இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மீண்டும் வாரணம் ஆயிரம் மேஜிக் – சூர்யா 38 குறித்து வெளியான அப்டேட்.!

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூர்யா 38 படத்தின் ஷூட்டிங் வெகு விரைவில் தொடங்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் இசையமைக்கும் 70-வது படம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.