பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த சுரேஷ் ரெய்னா அது எப்படின்னு எனக்கும் சொல்லுங்க என கேட்டுள்ளார்.
Suresh Raina Conversation with Dulquar Salman : கொரானா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் திரையுலகப் பிரபலங்கள் என அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.
வீட்டில் இருக்கும் பிரபலங்கள் நேரத்தை கழிக்க வித்தியாச வித்தியாசமாக எதையாவது முயற்சி செய்து வருகின்றனர். பல நடிகர்கள் கிச்சனில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மலையாள நடிகரான துல்கர் சல்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சண்டே சமையல் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் சமைப்பதை பார்த்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அது எப்படின்னு எனக்கும் சொல்லுங்க ப்ரோ நானும் வீட்ல ட்ரை பண்றேன் என அவரிடம் டிப்ஸ் கேட்டுள்ளார்.
அதற்கு துல்கர் சல்மான் நாங்க இப்போ கொச்சியில் இருக்கோம். ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாங்க நானே என் கையால் விதவிதமாக சமைத்து தருகிறேன் என கூறியுள்ளார்.