Maanaadu Update

மாநாடு படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாக உள்ளது, இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.

கடந்த ஜனவரி மாதமே படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் இப்படம் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருந்தது, இறுதியில் இப்படம் கைவிடப்படுவதாக சுரேஷ் காமாட்சி அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டார்.

அதன் பின்னர் நடந்த பஞ்சாயத்துக்கு பிறகு சிம்பு இப்படத்தில் நடிக்க ஓகே சொல்லி இருந்தார். ஆனால் இன்னும் ஷூட்டிங் தொடங்காமலேயே இருந்து வந்த நிலையில் சுரேஷ் காமாட்சி ஷூட்டிங் தொடங்கும் தேதி வரும் பொங்கல் நாளன்று வெளியாகும் என அறிவித்துள்ளார்.

அப்பாடா ஒரு வழியாக மாநாடு நடக்க போகுது நாம மாஸ் காட்ட போறோம் என சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.