சிம்புவுடன் சேர்ந்து மாநாடு படத்தை பார்த்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இந்த படம் பற்றிய விமர்சனமும் வெளியாகியுள்ளது.

Suresh Kamatchi Review on Maanadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து உள்ளார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, பாரதி ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ளார்.

நடிகர் சிம்புவுடன் இணைந்து சுரேஷ் காமாட்சி இந்த படத்தினை பார்த்துள்ளார். இத்திரைப்படத்தினை பார்த்த இவர் திரில்லர் மாஸ் பொழுது போக்காக இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. எஸ் ஜே சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் அழகிய நடிப்பால் கவர்ந்துள்ளார். ஒய் ஜி மகேந்திரன் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார் என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.