Suresh Kamatchi About Simbu in Mamaadu Success Meet

சிம்புவுக்கும் எனக்குமிடையே ஆயிரம் பிரச்சனை இருக்கு ஆனாலும் அவரை இயங்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என மாநாடு படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியுள்ளார்.

Suresh Kamatchi About Simbu in Mamaadu Success Meet : தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மாநாடு. 25 நாளில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு மட்டும் கலந்து கொள்ளவில்லை. அவர் வேறு ஒரு படத்தின் சூட்டிங்கில் இருப்பதால் கலந்துகொள்ளவில்லை என சொல்லப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பக்கபலமாக இருந்தவர்கள் உத்தம்சிங் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் இருவரும் தான்.. இந்த படம் தொடங்கிய சமயத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. அந்த கருத்து வேறுபாடுகள் எல்லாமே படத்திற்காக தானே தவிர, எங்களுக்குள் பர்சனலாக எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. சிம்புவுக்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவரை நான் எப்போதும் எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

திரை பிரபலங்கள் கலந்துகொண்ட “ROCKY” படத்தின் சிறப்பு காட்சி..! | Sathyam Cinemas | Vasanth Ravi | HD

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ ஆண்டாள் தமிழ் ஆண்டாள்.!

அதேபோல இந்த படத்தின் கதையைக் கேட்டதுமே, எஸ் ஜே சூர்யா இந்த படம் ஹிந்தியில் கூட நல்ல விலைக்குப் போகும்.. அதனால் எனக்கு சம்பளம் தவிர எக்ஸ்ட்ராவாக லாபத்தில் கொஞ்சம் சதவீதம் கொடுங்கள் என தமாஷாக கூறினார். அந்த அளவுக்கு இந்த படத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்தை தாங்கி பிடித்தது. இளையராஜா சாருக்கு இசைஞானி என பெயர் வைத்துவிட்டு, இவருக்குத்தான் இளையராஜா என பெயர் வைத்திருக்க வேண்டும்.. இந்த படம் தாமதமானாலும் எல்லாமே பாசிட்டிவாக தான் அமைந்தது” என்று கூறினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.