25 நாடு மாநாடு திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது குறித்து தயாரிப்பாளர் பதிவு செய்துள்ளார்.

Suresh Kamatchi About Maanadu Collection : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்தத் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில் ரிலீஸ் தள்ளிப் போய் ஒரு வழியாக நவம்பர் 25ஆம் தேதி வெளியானது. முதல் நாளிலே இந்த படம் 8 கோடி ரூபாய் வசூல் செய்தது. 25 நாளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தற்போது இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் #மாநாடு இருபத்தைந்து நாட்களைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் நீடிக்க காரணமாக இருந்த ரசிகர்கள், மக்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகை, ஊடக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் #மாநாடு படக் குழுவினர் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றிகள்.. என தெரிவித்துள்ளார்.

குழந்தையின் Photoshoot Video-வை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களை என வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

திருவாதிரை நாளில், ஆருத்ரா தரிசனம் நன்மையாம்.!