Suresh Chakravarty Mems About Archana

அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியிட்ட மீம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suresh Chakravarty Mems About Archana : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் இந்த நிகழ்ச்சியை நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இன்று மூன்றாவது நபராக வெளியேற்றப்பட்டவர்கள் சுரேஷ் சக்ரவர்த்தி. ஆரம்பத்தில் இவர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் போகப்போக இவருடைய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் பிடித்துப்பனது.

இளைஞர்களுக்கு டஃப் கொடுத்து விளையாடுவதாக சுரேஷ் சக்ரவர்த்தியை அனைவரும் பாராட்டி வந்த நிலையில் திடீரென அவர் வெளியேற்றப்பட்டார். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த வெளியேற்றத்தில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என தொடர்ந்து பலர் கூறி வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் நிகழ்ச்சி குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னைப் போலவே அர்ச்சனா ஷோபாவில் படுத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரை கலாய்க்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னதான் ஆயிரம் இருந்தாலும் உங்கள் லெவலுக்கு அர்ச்சனாவால் வர முடியாது என கூறி வருகின்றனர். மேலும் பிக் பாஸ் 4-ல் சுரேஷ் சக்ரவர்த்தியை மிஸ் செய்வதாக பெரும்பாலானோர் கூறி வருகின்றனர்.