Suresh Chakravarty About Balaji Murugadoss

பாலாஜியை என் பையன்னு சொன்ன பொய் பெரிய தவறு என்பது போல பதிவிட்டுள்ளார் சுரேஷ் சக்ரவர்த்தி.

Suresh Chakravarty About Balaji Murugadoss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இன்னும் ஓரிரு வாரங்களில் நிகழ்ச்சி முடிவடைய உள்ள நிலையில் அடுத்த வாரம் பழைய போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ரசிகை ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் தாத்தா அடுத்த வாரம் நீங்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். ஒருவேளை நீங்கள் உள்ளே சென்றால் சனம் செட்டி பவர் என்ன என்பதை அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.

பாலாஜியை உங்கள் மகனாக பார்ப்பதாக சொன்னீர்கள் அவருக்கு அறிவுரை வழங்குங்கள் செய்த தவறை எடுத்து கூறுங்கள் என தெரிவித்துள்ளார்.

அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி என்னுடைய சொந்த மகனுக்கே ஈடு இணை வேறு எவரும் இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன் என பதிலளித்துள்ளார்.

சுரேஷ் சக்ரவர்த்தி இந்த பதில் பாலாஜியை மகனாக நினைப்பதாக கூறியது தவறு என புரிந்து கொண்டேன் என்பது போல கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.