அசிங்க அசிங்கமாக திட்டிய சுரேஷ் சக்ரவர்த்தி

லைவ் வீடியோவில் வந்த ஃபோன் கால் சுரேஷ் சக்ரவர்த்தி கடுப்பாகி அசிங்கமாக திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரை நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முதல் மூன்று சீசன் முடிந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 18 போட்டியாளர்களில் ஒருவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இவர் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார்.

அந்த வகையில் நேரலை பேட்டி ஒன்றில் தொடர்ந்து போன் கால் வந்து கொண்டே இருந்ததால் அந்த நபரை அசிங்க அசிங்கமாக திட்டி உள்ளார் சுரேஷ் சக்ரவர்த்தி.

இந்த வீடியோவை ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.