Suresh Chakravarthy

தன்னை கை கொடுத்து வரவேற்ற போட்டியாளர் இதுவரை இது என்ன ஜாதி என்று கேட்டுள்ளார் சுரேஷ் சக்ரவர்த்தி.

Suresh Chakravarthi in Bigg Boss : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் நேற்று ஒளிபரப்பானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை போட்டியாளர்கள் அறிமுகம் கோலாகலமாக நடைபெற்றது.

மொத்தம் 16 பிரபலங்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக களம் இறங்கி இருப்பவர் சுரேஷ் சக்ரவர்த்தி.

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் இவரை முதல் ஆளாக வரவேற்றவர் பாலாஜி முருகதாஸ் தான். தன்னை கை கொடுத்து வரவேற்ற பாலாஜியிடம் சுரேஷ் சக்கரவர்த்தி நீங்கள் என்ன கேஸ்ட் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பாலாஜி முருகதாஸ் நாயர் என பதிலளித்துள்ளார். தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து இது குறித்து விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஷிவானியை மூஞ்சிய ஏன் அப்படி வச்சிருக்க என பேசியது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.