Sura
சுறா ஒரு குப்பை படம்னு சொன்ன முக்கிய பிரபலம் கொடுத்த பேட்டி விஜய் ரசிகர்களுக்கே ஷாக் கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் எஸ்.பி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியாகி மோசமான விமர்சனத்தை சந்தித்த திரைப்படம் சுறா.

விஜயின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத தோல்வியை தழுவிய இந்த படத்தை பற்றி படத்தின் தயாரிப்பாளர் ஏற்கனவே அளித்திருந்த பேட்டி ஒன்றில் சுறா குப்பை படம், ஓடவே இல்லை என பேசி வேதனைப்பட்டு இருந்தார். தயாரிப்பாளரே இவ்வாறு கூறியது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

ஆனால் தற்போது அவருடைய சமீபத்திய பேட்டியில் சுறா நல்ல படம் தான், நன்றாக தான் ஓடியது என பேசியுள்ளார். அப்போ குப்பை படம்னு சொல்லிட்டு இப்போ நல்ல படம்னு சொல்லி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு ஷாக்கிங் தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.