தளபதி விஜயின் பழைய திரைப்படங்கள் யூட்யூபில் புதிய சாதனைகளை படைத்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Sura and Vaseegara Record in Hindi Dubbing : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு இருப்பது ஏதோ ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது இவரது நடிப்பில் வெளியாகி படங்கள் பாடல்கள் ஆகியவை பெரும் வரவேற்பை பெறுவது வழக்கம்.

மேலும் தளபதி விஜய் நடித்து வெளியான திரைப்படங்கள் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிடும் வழக்கமான ஒன்று. இதுவரை விஜயின் பல்வேறு திரைப்படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

அதிரடியான புதிய சாதனைகள் படைத்த தளபதி விஜயின் பழைய படங்கள் - கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

அந்த வகையில் தற்போது விஜய் நடிப்பில் வெளியான சுறா, வசீகரா ஆகிய திரைப்படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. தற்போது இந்த இரண்டு படங்களும் 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளன.

விஜய்யின் பழைய திரைப்படங்கள் புதிய சாதனைகள் படைத்திருப்பது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. தமிழில் தோல்வியை தழுவிய சுறா திரைப்படம் இந்தி டப்பிங்கில் பெரிய வெற்றியைப் பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சி அடையவும் செய்துள்ளது.