Super Star Vijay

Super Star Vijay : தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நான் அன்றே சொன்னேன் என பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.

இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் நடித்து உள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு என பலர் நடித்துள்ள இந்த படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனரும் விஜயை வைத்து பூவே உனக்காக படத்தை இயக்கி இருந்த விக்ரமன் அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நான் அன்றே கூறியிருந்தேன்.

சண்டை காட்சிகளுக்கு கூட அவர் எப்போதும் டூப் பயன்படுத்த மாட்டார் என கூறியுள்ளார்.

அதே போல் ஷூட்டிங் தொடங்க 1.30 மணி நேரம் இருக்கும் போதே வந்து டப்பிங் பேசி முடித்து விடுவார்.

இதையெல்லாம் வைத்து தான் நான் விஜயின் அப்பாவான எஸ்.ஏ.சி மற்றும் அவரது அம்மாவிடமும் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறியிருந்தேன்.

அது இன்று உண்மையாகியுள்ளது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.