Super Star Rajinikanth Tweet
சாதிச்சிடீங்க மோடி ஜி என ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Super Star Rajinikanth Wishes : இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து அதற்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. அதற்கான ஒட்டெண்ணிக்கை தற்போது படு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

இந்திய அளவில் பாஜக தொடர்ந்து 350 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது.

இதனையடுத்து இலங்கை பிரதமர், தமிழக முதல்வர் மோடிக்கு வாழ்த்து கூறிய நிலையில் நடிகர்களில் முதல் ஆளாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திரும்பவும் ஜெயிச்சிடீங்க மோடி ஜி என குறிப்பிட்டு பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தை தொடர்ந்து நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.