Super Star Rajinikanth Political Party Announcement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருவதால் அவரது கட்சி அறிவிப்பு தேதி தள்ளிப்போகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Super Star Rajinikanth Political Party Announcement : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரானா ஊரடங்குக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது.

படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் படக்குழுவினருக்கு சேர்ந்த நான்கு பேருக்கு குரானா வைரஸ் பற்றி உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை.. ரஜினிகாந்தின் கட்சி அறிவிப்பு தேதி தள்ளிப் போகிறதா??

ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதே தவிர மற்ற எந்த பிரச்சனையும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல் நிலை சீராகும் வரை ரஜினிகாந்த் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பார் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக வரிசையில் 31-ஆம் தேதி நடைபெற இந்த கட்சி அறிவிப்பு தேதி குறித்த அறிவிப்பு தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து இன்னும் இது குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.